சீனாவின் குவாங்சி பகுதியில் கொரோனா விதிமுறையை மீறிய 4 பேரை சீனா அதிகாரிகள்கடுமையாக தண்டித்துள்ளனர்..
நான்கு பேரும் வெள்ளை நிற உடைகளை அணிந்து, குவாங்சி பிராந்தியத்தின் ஜிங்சி நகரைச் சுற்றிவர பணிக்கப்பட்டனர்.
ஜிங்சி நகரம், வியட்நாமின் எல்லையில் உள்ளது.
வியட்நாமிய குடிமக்கள் சிலர் சீனாவிற்குள் நுழைய உதவி புரிந்ததாக, கைதான 4 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
அவர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை வைத்திருப்பதைக் காண முடிந்தது, மேலும் அவர்களுடன் தலா இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1