நடிகை அஞ்சலி திரு இயக்கும் வெப்தொடரில் நடித்து ஓ.டி.டி.யில் அறிமுகம் ஆகிறார்.
நடிகை அஞ்சலி அங்காடி தெரு படத்தில் வேறுபட்ட நடிப்பினை வழங்கி, ரசிகர்கள் பட்டாளத்தின் கவனம் ஈர்த்தவர். இதேபோன்று, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் திரு. இவர், நான் சிகப்பு மனிதன், சமர், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்களை இயக்கியவர்.
இவர் ‘ஜான்சி’ என்ற புதிய வெப் தொடர் ஒன்றை இயக்க உள்ளார். இதில், நாயகியாக நடிகை அஞ்சலி நடிக்க உள்ளார். இத்தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரிக்க இருக்கிறார்.
இயக்குனர் திரு, ஜான்சி என்ற வெப் தொடர் மூலம் ஓ.டி.டி.யில் அறிமுகம் ஆகிறார். இதேபோன்று நடிகை அஞ்சலியும் ஓ.டி.டி.யில் அறிமுகம் ஆகிறார். இதுபற்றிய தகவலை நடிகை அஞ்சலி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1