உரம் தொடர்பான அரசாங்கத்தின் பொறுப்பற்ற தீர்மானங்களினால் இலங்கையில் தேயிலை கைத்தொழில் தற்போது பாரிய அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தலைவர் நிஷாந்த பெரேரா நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், உர நெருக்கடிக்கு முன்னர் வாராந்தம் 8 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏலம் விடப்பட்ட போதிலும், தற்போது அது 5 மில்லியன் கிலோவாக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் கரிம உரமோ இரசாயன உரமோ கிடைக்காததால் டொலர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெரேரா தெரிவித்தார்.
தேயிலை ஏலத்தில் காணப்பட்ட வீழ்ச்சியால் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பங்குதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி செயல்முறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளினால், வருடாந்தம் தொழில்துறை உற்பத்தி செய்யும் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 60% ஐ இலங்கை இழக்கிறது என்று பெரேரா கூறினார்.