கிழக்கு

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், ஊழியர் மோதல்: இருவரும் வைத்தியசாலையில்!

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய மாநகரசபை ஊழியரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (23) இந்த சம்பவம் நடந்தது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிள்ளையான் தரப்பு அதிகார மோதல், மாநகர முதல்வர் – ஆணையாளர் வடிவத்தில் நடந்து வருகிறது. இரண்டு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பதால், மாநகரசபை சிக்கலான நிலைமையை எட்டியுள்ளது.

அண்மையில் புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டு, மீண்டும் அது இரத்தாகிய சம்பவமும் நடந்தது.

இந்த நிலையில், நேற்று ஆணையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று, ஆணையாளரின் அலுவலகத்திற்கு அந்த ஊழியர் சென்ற பின்னர் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது. இதன்போது, குறிப்பிட்ட தற்காலிக ஊழியர், ஆணையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஆணையாளரே முதலில் தாக்குதல் நடத்தியதாகவும், தாம் பதில் தாக்குதலே நடத்தியதாகவும் தற்காலிக ஊழியர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் நெருக்கமான அந்த ஊழியர் பணம் வாங்கிக் கொண்டு வேலைகள் செய்து கொடுப்பதாக, முதல்வரிடம் ஆணையாளர் குற்றம்சுமத்தியதாகவும்,  அந்த தற்காலிக ஊழியரிடம் முதல்வர் இது தொடர்பில் வினவியபோது, அதை மறுத்து, தன்னை பற்றிய அவதூறு பரப்புவதாக குறிப்பிட்டே ஆணையாளரின் அலுவலகத்திற்கு சென்றதாகவும் முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் ஊடகப்பணிகளை மேற்கொண்ட தற்காலிக ஊழியரான தாக்குதலில் ஈடுபட்டவரை, பொறியியல் பிரிவிற்கு ஆணையாளர் மாற்றியதால் ஆத்திரமடைந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆணையாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தானும் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கிழக்கு மக்களும் நாளை வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலிப்போம்: கூட்டமைப்பு அழைப்பு!

Pagetamil

13 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிக்க முயன்ற தந்தை கைது!

Pagetamil

அடக்கம் செய்ய இடமின்றி கிறிஸ்தவர்கள் அவதி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!