பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கிருலப்பனை, பாதுக்க, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை விநியோகிக்கும் பல இடங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
போலியான ரூபாய் நோட்டுகளுடன் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 5000, 1000, 500 நோட்டுகள், அச்சிடும் இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன.
டிசம்பர் பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதில் சந்தேகநபர்கள் கவனம் செலுத்தி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண பரிவர்த்தனைகளின் போது மாற்றக்கூடிய போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போலி ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிக்கும் சந்தேக நபர்கள் குறித்து காவல்துறையின் அவசர உதவி எண் 119ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.