அம்பத்தூர் அருகே, காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் அருகே, இளைஞர் மற்றும் இளம்பெண்ணின் உடல்கள், ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா் உடலை மீட்டு பிரேத பாிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தது திருவண்ணாமலை மாவட்டம் முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆந்திர மாநிலம், விஜயநகரம் பகுதியைச் சார்ந்த சரண்யாஶ்ரீ என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், சரண்யாஸ்ரீ வீட்டில் காதலுக்கு எதிா்ப்பு தொிவித்ததால், காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த காதல் ஜோடி, நள்ளிரவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.