27.4 C
Jaffna
October 1, 2022
இலங்கை

வைத்தியர் ஷாபி மீள் நியமனத்திற்கு எதிராக கொதிக்கும் ரத்ன தேரர்!

குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், சுகாதார அமைச்சினால் மீள் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு தொடர்வதாகவும் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதவான் நீதிமன்றம் அவதானித்துள்ளதாகவும் ரத்ன தேரர் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வைத்தியர் சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும், அது முற்றிலும் தவறானது என்றும் தேரர் தெரிவித்தார்.

“அவருக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால் அவர் இரண்டு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

சுமார் 1200 தாய்மார்கள், குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களின் சாட்சியங்கள் அடங்கிய அறிக்கையானது சுகாதார அமைச்சினால் இதுவரை பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவில்லை என ரத்ன தேரர் தெரிவித்தார்.

“இது இந்த அரசாங்கத்தின் கீழும் கடந்த அரசாங்கத்தின் கீழும் சுகாதார அமைச்சினால் அனுப்பப்படவில்லை. இது கடுமையான குற்றமாகும். அறிக்கையை பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பாததற்காக  முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர்களை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு சுகாதார அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார்.

இந்த சம்பவத்தை மூடிமறைக்க இடமளிக்க மாட்டோம் என்றும், இந்த வழக்கில் தலையிடுவோம் என்றும் தேரர் கூறினார்.

ஜனாதிபதி குருநாகல் வைத்தியசாலையின் அறிக்கையை பெற்றுக்கொண்டு வைத்தியர் சிஹாப்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததா இல்லையா என்பதை புலனாய்வுப் பிரிவினரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சுசில் விவகாரத்தில் மொட்டின் தீர்மானம் விரைவில்!

Pagetamil

யாழில் குளவிக்கொட்டிற்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

Pagetamil

கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார காலமானார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!