நாட்டில் ஒமைக்ரோன் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்ட மூவரில், ஒருவர் PCR சோதனையின் சீரற்ற மரபணு சோதனை மூலம் கண்டறியப்பட்டார் என, சுகாதார நிபுணர்களின் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தொற்று சந்தேகத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டவர்களில் இருந்து சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் மாதிரி பரிசோதிக்கப்பட்ட போதே, தொற்று உறுதியானது என்றார்.
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர், தனது சொந்த நாட்டிற்கு திரும்பியபோது ஒமைக்ரோன் தொற்று உறுதியானது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனையை சுகாதார அதிகாரிகள் இடைநிறுத்தியதன் விளைவாக இது ஏற்பட்டதாக அவர் கூறினார். நாட்டிற்குள் வரும் போதே, தொற்றாளரை அடையாளம் காண முடியவில்லையென கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1