பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
26 வயதான கவிஞர் அஹ்னாப் ஜஸீம் 2020 மே மாதம் புத்தளத்தில் உள்ள சேவ் தி பேர்ல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் நவரசம் என்ற புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதம் மற்றும் குழந்தைகளிடம் வன்முறையை ஊக்குவித்ததாகவும், தனது இலக்கியப் பணியின் மூலம் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு உதவியதாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கற்பித்த எக்ஸலன்ஸ் பாடசாலையில் மாணவர்களிடம் தீவிரவாத பேச்சுக்களை நடத்தியதாக கடந்த நவம்பர் மாதம் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் ஜஸீம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
எவ்வாறாயினும், சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் உயர் நீதிமன்றத்திற்கு ஜசீமுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என அறிவித்ததையடுத்து, புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று அஹ்னாப் ஜசீமை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.