28.8 C
Jaffna
October 3, 2024
Pagetamil
இலங்கை

எரிவாயு பிரச்சனைக்கு 2,3 வாரங்களிற்குள் தீர்வு கிடைத்து விடும்!

நிலவும் எரிவாயு தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜனக வக்குமுபுர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்ததாகவும், தர உறுதிப் பரிசோதனையின் பின்னரே எரிவாயு இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

லேபிள்கள் வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பாக பல கவலைகள் எழுந்துள்ளதை அவதானிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தலையிட்டுள்ளதாகவும், எனினும் நாட்டில் இரண்டு எரிவாயு நிறுவனங்களே உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் வக்கும்புர குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துவதில் மக்களின் அச்சத்தை போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் காணி விற்ற வெளிநாட்டுக்காரரின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் கைது!

Pagetamil

தமிழ் அரசு கட்சியே எம்முடன் இணைய வேண்டும்!

Pagetamil

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

Pagetamil

ஆடைத் தொழிற்சாலை அடித்துடைக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சரின் தம்பி கைது!

Pagetamil

தொழிலதிபரின் கட்சியில் இணைந்த மைத்திரியின் மகன்!

Pagetamil

Leave a Comment