29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

நேற்று 747 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 573,649 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்களில் 745 பேர் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த இருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது 13,575 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 382 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,433 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 2,283 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 27 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மரணித்தவர்களின் எண்ணிக்கை 14,641 ஆக அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment