பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் அடிப்படைவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் உடல் எச்சங்களை தாங்கிய பேழை இன்று அதிகாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள ராஜ்கோ இன்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலையின் முன்னாள் பொது முகாமையாளர் பிரியந்த குமார தியவதன கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட பிரியந்தவின் உடலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, சீல் வைக்கப்பட்ட பேழையில் வைக்கப்பட்டு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று மாலை 5.10 மணியளவில் பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள், நீர்கொழும்பு நீதித்துறை விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் இளங்கரத்ன மற்றும் குருநாகல் நீதித்துறை வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோரினால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.