2வது லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் இன்று (5) ஆரம்பிக்கிறது. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும்.
கடந்த எல்.பி.எல் சீசனின் இறுதிப் போட்டியில் ஆடிய நடப்புச் சாம்பியனான யப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள், இன்றைய முதலாவது போட்டியில் ஆடுகின்றன.
இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது.
2021 எல்பிஎல் போட்டியின் இறுதிப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் உள்ள சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
கடந்த வருட சம்பியனான யாழ்ப்பாண அணிக்கு மீண்டும் திசர பெரேரா தலைமை தாங்குகிறார். தம்புள்ள ஜெயன்ட் அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குகிறார்.
அனுபவம் வாய்ந்த அஞ்சலோ மத்யூஸ் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு தலைமைதாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு பானுக ராஜபக்சவும், கண்டி வாரியர்ஸ் அணிக்கு ஏஞ்சலோ பெரேராவும் தலைமை தாங்குவர்.
2வது எல்பிஎல் தொடரின் போட்டிகளை பார்வையிட, அரங்கத் திறனில் 50% பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.
போட்டியை காண வரும் ரசிகர்கள் முழுமையாக தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும்.