28.4 C
Jaffna
December 5, 2021
ஆன்மிகம்

இந்தவார ராசி பலன் (3.12.2021- 9.12.2021)

புதன், குரு சாதக நிலையில் உள்ளனர். துர்கை வழிபாடு நலம் அளிக்கும்
அசுவினி: வருமானம் அதிகரிக்கும். லட்சியத்தில் வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
பரணி: சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும். வருமானம் எதிர்பார்த்தபடியே அமையும். வருங்காலக் கனவுகளை நனவாக்க பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.
கார்த்திகை, 1ம் பாதம்: விரயங்கள் குறையும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறர் உதவிகளை நாடிய நிலை மாறும். பணியில் தொய்வு ஏற்படாமலிருக்க தன்னம்பிக்கை தேவை. மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 3.12.2021 காலை 7:51 மணி – 5.12.2021 காலை 10:11 மணி

புதன், செவ்வாயால் நற்பலன் உண்டு. விநாயகர் வழிபாடு துயர் தீர்க்கும்.
கார்த்திகை 2,3,4: இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டும். குடும்ப அமைதி குறையாமலிருக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரோகிணி: குடும்பத்தில் ஒருவருக்குத் திருமண முயற்சி வெற்றி பெறும். வரவை விட செலவு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. விரயங்கள் குறையும்.. வீடு மாற்றம் பற்றி யோசிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: சச்சரவுகள் அகன்று சமாதானமாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகளிடம் அதிகக் கவனம் தேவை. இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
சந்திராஷ்டமம்: 5.12.2021 காலை 10:12 மணி – 7.12.2021 பகல் 12:48 மணி

ராகு, கேது, குரு நன்மைகளை வழங்குவர். அனுமார் வழிபாடு நன்மை தரும்.
மிருகசீரிடம், 3,4: வெளியூர்ப் பயணத்தால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். அலுவலகப் பணிகளில் சிறுதடை, தாமதங்கள் வந்து நீங்கும். இடம் பூமியால் லாபம் கிட்டும். எதிர்பார்த்த விஷயங்களில் லேசான தடைதாமதங்கள் ஏற்படலாம்.
திருவாதிரை: பணியிடத்தில் எதிர்பாராத பாராட்டுக் கிடைக்கும். பக்குவமாகப் பேசி நன்மைகளைச் சாதித்துக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் சந்திப்பு கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.
புனர்பூசம், 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு வரலாம். வெளிநாட்டு வாய்ப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும்.
சந்திராஷ்டமம்: 7.12.2021 பகல் 12:49 மணி – 9.12.2021 மாலை 4:32 மணி

புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனை தருவர். சிவன் வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம்,4: குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்ற நண்பர்களும் உறவினரும் பிரியமுடன் வந்திணைவர். மனதில் பணி பற்றி இருந்து வந்த குழப்பங்கள் மாறும்.
பூசம்: யோகமான வாரம். நினைத்த விஷயத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வரலாம்.
ஆயில்யம்: பணியிடத்தில் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். அமைதி கூடும். அனுகூலம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிக்கு நண்பர் ஒருவர் ஒத்துழைப்பு செய்வார்.

செவ்வாய், புதன், குரு அற்புத பலன்களை தருவர். பிள்ளையார் வழிபாடு சிரமம் தீர்க்கும்.
மகம்: எடுத்த முயற்சியில் எளிதில் வெற்றி கிட்டும். தொழில் வளம் கருதி புதிய கூட்டாளிகளைச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.
பூரம்: ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வர வேண்டிய பணம் இயல்பாய் வசூலாகும். பழைய முதலீட்டால் லாபம் கிட்டும். சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உத்திரம்,1: அதிகாரிகள் அன்பாய் நடந்து கொள்வர். சுப பேச்சுகள் முடிவாகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும்.

சந்திரன், கேது, புதன் நன்மையளிக்கும் அமர்வில் உள்ளனர். குரு வழிபாடு வளம் தரும்.
உத்திரம்,2,3,4: பாதியில் நின்ற பணியை முனைந்து முடிப்பீர்கள். பலநாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். புதிய மனிதர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. திடீர் செலவு ஒன்றால் சந்தோஷம் வரும்.
அஸ்தம்: வாய்ப்பு ஒன்று தேடி வரும். சொந்தங்களால் சிறுசிறு நன்மை உண்டு. நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லை தீரும்.
சித்திரை, 1,2: சொந்த பந்தங்களால் துயர் ஒன்று விலகும். நினைத்தது நிறைவேற நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றி ஓரிரண்டு நாட்களில் மறையும்.

குரு, புதன், சந்திரன் அற்புத நற்பலன்களை தருவர் அம்பாள் வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.
சித்திரை, 3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும். பம்பரம்போல் சுழன்று பணிபுரிவீர்கள். பகையொன்று மனம் மாறி நட்பாகும். அயல்நாட்டிலிருந்து சந்தோஷச்செய்தி வந்து சேரும். புதிய ஆடை, நகை சேர்க்கை ஏற்படும்.
சுவாதி: உற்சாகம் அதிகரித்து, சோர்வு நீங்கும். அலுவலகப் பணிகளில் பாராட்டுக் கிடைக்கும். பணம் மிக நல்ல வழிகளில் செலவாகும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.
விசாகம் 1,2,3: புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். தொழில்/ வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நின்றுபோயிருந்த விஷயங்களைத் தொடருவது பற்றிச் சிந்திப்பீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

குரு, சனி புதன் அனுகூல பலனைத் தருவர். பிள்ளையார் வழிபாடு நிம்மதி தரும்.
விசாகம்,4: பிரிந்து சென்றவர்களைப் பற்றிக் கவலை வேண்டாம். பொருளாதார நிலை உயரும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். பணியிடத்தில் அனுகூலம் உண்டு.
அனுஷம்: புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு சந்தோஷத் தகவல் உண்டு. சமயோசித புத்தியால் நன்மை காண்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் சந்தோஷமும் பெருமிதமும் தரும்.
கேட்டை: இடம், பூமியால் லாபம் கூடும். அரசியல் தலைவர்களின் அன்பு கிட்டும். குறிக்கோள் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சியுடன் கூடிய பரபரப்பான வாரம். ஆரோக்யம் மேம்படும்.

சந்திரன், செவ்வாய், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். குருவாயூரப்பன் வழிபாடு நலம் தரும்.
மூலம்: உடன்பிறப்புகள் அன்பு காட்டுவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை விலக்குவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணத்தைச் சற்றுத் தள்ளிப் போடலாம்.
பூராடம்: பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்னைகள் ஏற்படாமல் கவனம் தேவை. வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. பிடிவாத குணத்தைவிட்டு நன்மை காண்பீர்கள்.
உத்திராடம்,1: வெற்றிச் செய்தி ஒன்று தேடி வரும். சிறிய பண வரவு உண்டு.. வெளிவட்டாரத்தொடர்பு விரிவடையும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

சூரியன், புதன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். ஆஞ்சுநேயர் வழிபாடு வளம் தரும்.
உத்திராடம்,2,3,4: நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதியடைவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இந்த வாரம் சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் நிம்மதியளிக்கும்.
திருவோணம்: உழைப்புக்கேற்ற பலன் இல்லை என்ற தேவையற்ற உறுத்தலை விலக்குங்கள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து நன்மை காண்பீர்கள். வாழ்க்கைத் துணையின் விருப்பம் ஒன்று நிறைவேறும்.
அவிட்டம்,1,2: விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நினைத்தது நிறைவேறப் பெருமுயற்சி எடுப்பீர்கள். நிகழ்காலத் தேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

புதன், சூரியன், செவ்வாயால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சனீஸ்வரர் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம், 3,4: வெளிநாட்டுத் தொடர்பு விஷயமாக அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாக அமையும். எதிர்பார்த்த சுபசெய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
சதயம்: சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படலாம். உணவு மற்றும் தூய்மை விஷயத்தில் எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி,1,2,3: எதிர்பார்ப்பு நிறைவேறா விட்டாலும் ஏமாற்றம் இருக்காது. உறவினர்களின் வருகையில் வீட்டில் கலகலப்பு உண்டாகும். பணியாளர்கள் தங்களின் உழைப்பால் நன்மை அடைவர்.

சூரியன், புதன், சனி சாதகமான வழங்குவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு துயர் தீர்க்கும்.
பூரட்டாதி, 4: கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வீட்டை விரிவு செய்து கட்டுவதற்கான அறிகுறிகள் தோன்றும். எதிரிகள் விலகுவர். நண்பர் ஒருவருக்கு உங்களால் நன்மை ஏற்பட்டு நெகிழ்ச்சியடைவார்.
உத்திரட்டாதி: குழந்தைகள் வாழ்வில் வளர்ச்சி காண்பார்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை. வேலையாட்களிடம் அன்பாகப் பேசி வேலை வாங்கி வெல்வீர்கள்.
ரேவதி: எதிர்பாலினத்தினரின் ஒத்துழைப்புக் கிட்டும். ஆரோக்கியம் சீராகி சக பணயாளர் ஒருவருக்கு வந்த பிரச்னை அகலும்.செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 1.12.2021 அதிகாலை 4:48 மணி – 3.12.2021 காலை 7:50 மணி

What’s your Reaction?
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனி உத்திரம்… தவறாமல் வழிபடுங்கள்!

Pagetamil

லட்சியப்படி வாழும் ராசிகள்..

divya divya

இன்றைய நாள் எப்படி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!