27.4 C
Jaffna
October 1, 2022
உலகம்

தாய்லாந்தில் 897 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது!

தாய்லாந்தின் பாங்காக் துறைமுகத்தில் இன்று 897 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தைவானிற்கு கடத்தப்படவிருந்த நிலையில் சுங்க அதிகாரிகள் இந்த கடத்தலை முறியடித்தனர்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 24 அட்டைப் பெட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் எக்ஸ்ரே எடுத்த சோதனையிட்ட போது, ​​ஒவ்வொரு பெட்டியிலும் போதைப்பொருள் பக்கட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதில் 897 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இந்த பொதிகள் தைவானுக்கு செல்லும் சரக்கு கொள்கலனில் ஏற்றப்பட திட்டமிடப்பட்டது. கப்பல் நிறுவனத்தால் சிலிகன் தாள்கள் என அறிவிக்கப்பட்டதாக சுங்கத் துறையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நியூ சவுத் வேல்ஸில் எகிறுகிறது தொற்று!

Pagetamil

73ஆண்டுகள் தாமதமாக நூலகத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட புத்தகம்!

Pagetamil

நாயை கண்டுபிடித்து கொடுத்தவருக்கு சன்மானமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!