இலங்கையில் நேற்று 738 கோவிட்-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்ட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 565,471 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 735 பேர் புத்தாண்டுக் கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த மூன்று நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.
நேற்று 341 நபர்கள் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,124 ஆக உயர்ந்தது.
தற்போது 9,948 பேர் கொரோனா வைரஸுக்கு பல வசதிகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று மேலும் 27 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் இறப்பு எண்ணிக்கை 14,399 ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1