ஹெட்டிமுல்ல கனிஷ்ட பாடசாலை மாணவர்கள் கண்டி-கொழும்பு பிரதான வீதியைக் கடப்பதற்கு, 40 வருடங்களுக்கும் மேலாக மூதாட்டியொருவர் உதவி செய்து வருகிறார்.
ட்ரபிக் ஆச்சி என அழைக்கப்படும் அந்த மூதாட்டிக்கு இப்போது 84 வயது. அவர் அந்த பகுதியியில் அவர் பிரபலமானவர்.
கே. லில்லி வயலட் என்ற அந்த மூதாட்டி, மே 5, 1938 அன்று கேகாலையில் பிறந்தார். கணவர் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியாக பணியாற்றினார். தனது மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோதே கணவர் உயிரிழந்து விட்டதாக குறிப்பிடுகிறார்.
”1980 ஆம் ஆண்டு எனது மகள் மங்கலிகா ஹெட்டிமுல்ல ஜூனியர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். முதல் நாளிலேயே குழந்தைகள் வீதியைக் கடப்பது எவ்வளவு சவாலானது என்பதை நான் கவனித்தேன், அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், 41 ஆண்டுகளாக குழந்தைகள் வீதியைக் கடக்க என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன், ”என்று அவர் புன்னகையுடன் கூறினார்.
அப்போதிருந்து, அந்தப் பாடசாலையுடன், அருகிலுள்ள மற்ற பாடசாலை மாணவர்களுக்கும் வீதியைக் கடக்க உதவுவதைக் காணலாம்.
போக்குவரத்து போலீசார் வழங்கிய தொப்பி மற்றும் ஜாக்கெட்டை அணிந்து, 84 வயதிலும் தனது பணியை தொடர்கிறார்.
அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் அவரது சேவையை அங்கீகரித்து ஒப்புக்கொண்டன.