பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் சில வந்தன.
இவர் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியது. எனினும், படம் சொல்லிக் கொள்ளும்படி போகவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கும் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் லொஸ்லியாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் தர்ஷன் நடித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
திரைப்படத்தில் நடிக்க தொடங்கியதும் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். அந்த வகையில் தற்போது பயங்கர ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ள லொஸ்லியாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியானது. இதைப்பார்த்த ரசிகர்கள் கொரியன் ட்ராமாவில் வரும் நாயகி போல இருக்கிறீர்கள் என கலாய்த்து வருகின்றனர்.