விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
விஷாலின் புதிய படமான ’வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவன் கதை தான் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் என்றும் இப்படத்தில் விஷால் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஷால், டிம்பிள் ஹைத்தி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிகாரம் பலம் படைத்தவர்களை எதிர் கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் #வீரமேவாகைசூடும்
ஜனவரி 26 வெளியீடு#VeeramaeVaagaiSoodum #VeeramaeVaagaiSoodum2022Jan26@VishalKOfficial @DimpleHayathi @thisisysr @Thupasaravanan1 @Ponparthiban @VffVishal pic.twitter.com/frTZlaCQyj— Johnson PRO (@johnsoncinepro) December 1, 2021
து.பா.சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.