நேற்றிரவு பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
கொத்மலை கிரிட் உப நிலையத்திலிருந்து பியகம கிரிட் உப நிலையத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்கள் பழுதடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று இரவு 7.45 மணியளவில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
பியகம, கொட்டுகொட, ஹபரணை, காலி, மாத்தறை, பன்னிபிட்டிய, இரத்மலானை, ஸ்ரீ ஜயவர்தனபுர, குருநாகல், கிரிபத்கும்புர, அதுருகிரிய, சபுகஸ்கந்த மற்றும் கொஸ்கம ஆகிய உப நிலையங்களை அண்டிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1