இலங்கை

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட 3 இராணுவத்தினர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட மூன்று இராணுவத்தினர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றுகாலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன்மீது இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் . இந்த நிலையிலேயே இன்றையதினம்(28) முல்லைத்தீவு நகரில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!