கிழக்கு முக்கியச் செய்திகள்

கிண்ணியா படகு விபத்தில் காயமடைந்த மேலுமொரு சிறுமி உயிரிழப்பு!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்

கடந்த (23) கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக 6பேர் உயிரிழந்த நிலையில் 18பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12 பேர் வீடுதிரும்பினார்

மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் மேலுமொரு சிறுமி திருகோணமலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் முஹம்மது றபீஸ் பாத்திமா நிபா (06வயது) என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் உடல் திருகோணமலை தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பெற்றோர்களிடம் கையாளிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

மேலும் உயிரிழந்த சிறுமியின் தாயாரும் விபத்துக்குள்ளான இழுவை படகில் பயணித்ததாகவும் அவர் கிண்ணியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்பதுடன் இவ் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

Pagetamil

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரெலோ கையெழுத்திடாது!

Pagetamil

பேருந்து சேவைக்கு குறிஞ்சாக்கேணியில் எதிர்ப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!