29.8 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை COVID-19 வைரஸின் பெயர் Omicron

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரோன் (Omicron) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமிக்ரோன்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த வைரசை ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் 6 பேர், பொட்ஸ்வானாவில் 3 பேர், ஹொங்கொங், இஸ்ரேலில் தலா ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

Leave a Comment