உலகம் முக்கியச் செய்திகள்

பல முறை உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா திரிவு தென்னாபிரிக்காவில் கண்டுபிடிப்பு

தென்னாபிரிக்காவில் பலமுறை திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் திரிபை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானளவில் தொற்றக்கூடியதா அல்லது தடுப்பூசிகள் மற்றும் முந்தைய தொற்றுநோயால் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை கடக்கும் ஆற்றலை கொண்டதா என்பது இன்னும் நிறுவப்படவில்லை.

C.1.2 என அறியப்படும் புதிய திரிபு, மே மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இப்போது பெரும்பாலான தென்னாபிரிக்க மாகாணங்களிலும், ஆபிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள மற்ற ஏழு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

பொட்ஸ்வானா, ஹொங்கொங் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்திருந்தோரிலும் இந்த திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இது மற்ற மாறுபாடுகளுடன் தொடர்புடைய பல திரிபுகளைக் கொண்டுள்ளது. அதிகரித்த பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்திகளை மீறிய செயற்திறன் கொண்டதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.  ஆய்வக சோதனைகள் நடந்து வருகின்றன.

பீட்டா திரிபைக் கண்டறிந்த முதல் நாடு தென்னாப்பிரிக்கா ஆகும். இது மிகவும் அபாயமான திரிபாகும்.

கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் அசல் பதிப்பை விட பீட்டா எளிதில் பரவும் என நம்பப்படுகிறது. அதற்கு எதிராக தடுப்பூசிகள் குறைவாகவே செயல்படுகின்றன என்பதற்கான சான்றுகள் உள்ளன.

சில நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் தடை விதித்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

ஆப்கானின் முக்கிய நகரங்கள் வரிசையாக வீழ்கின்றன: தலிபான்களிடம் நகரத்தை ஒப்படைத்த ஆளுனர் கைது!

Pagetamil

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் பேரணி: அதிரடி திட்டத்தால் தடைமுயற்சி பிசுபிசுப்பு!

Pagetamil

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 4 பேர் இடமாற்றம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!