28.4 C
Jaffna
December 5, 2021
இந்தியா

கரூர் மாணவி தற்கொலை தொடர்ந்து ஆசிரியர் தற்கொலை: கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவு!

கரூர் தனியார் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணம் என சக ஆசிரியர்கள் சாடியதில் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர் திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சரவணன். வயது 42. இவர் கரூரில் பரணிபார்க் வித்யாலயா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சரவணன் பள்ளிக்கு செல்லாமல் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்துவிட்டு தனது மாமனார் ஊரான திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள செங்காட்டுப்பட்டி வந்துள்ளார்.

மதியம் வந்தவர் மாலை வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொழுது சரவணன் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.

இதை அடுத்து உடனடியாக துறையூர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி (பொறுப்பு) அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு இது குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் வழங்கினார். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்த நிலையில் மாணவியின் இறப்பிற்கு யார் காரணம் என்று ஆசிரியர்கள் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டதாக தெரியவருகிறது.

அப்படி தற்கொலை செய்து கொண்ட கணக்கு வாத்தியாரை சக ஆசிரியர்கள் நீ தான் காரணமா என சாடி உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த கணக்கு ஆசிரியர் சரவணன் தூக்கிஎன்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் தங்களது குடும்பத்தில் பிரச்சினை எதுவும் இல்லை என அவரது மனைவி கூறியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் மாணவி படித்து வந்த அதே பள்ளியில் இவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்திருப்பதால் மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா என்றும் பொலிசார் விசாரிக்கிறார்கள்.

அவரது கடைசி கடிதத்தில், மாணவியின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என மாணவர்கள் சந்தேகிப்பதுடன், கிண்டல் செய்கின்றனர். இதனால் என் மனம் உடைந்து விட்டது என எழுதி வைத்துள்ளார்.

இதுபற்றி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் வெங்கமேடு போலீசாரிடம் கேட்டபோது, மாணவியின் இறப்புக்கு அந்த ஆசிரியர் காரணம் இல்லை. அவர் கண்டிப்பான ஆசிரியர் என விசாரணையின்போது மாணவர்கள் தெரிவித்தனர். ஆகவே புலன் விசாரணை தொடர்கிறது என்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தடுப்பூசி செலுத்தியதால் மீண்டுவந்த கண்பார்வை; மகிழ்ச்சியில் மூதாட்டி!

divya divya

அடித்துடைக்கப்பட்ட அம்மா உணவகம்: ஸ்டாலினின் அதிரடி உத்தரவு!

Pagetamil

”பலாத்காரம் செய்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா”?: குற்றவாளியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!