29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை பொழியும்!

அடுத்த சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் மற்றும் நீரியல் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என பேச்சாளர் தெரிவித்தார்.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment