கிழக்கு

பேருந்து சேவைக்கு குறிஞ்சாக்கேணியில் எதிர்ப்பு!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளானதில், 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (24) காலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியாவுக்கு பேருந்து சேவை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி கலீலுல்லாஹ் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில் -பேருந்து, காக்காமுனையிலிருந்து குறிஞ்சாக்கேணிக்கு இன்று காலை பயணித்த நிலையில், குறிஞ்சாக்கேணியில் வைத்து பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த பேருந்து, குறிஞ்சாக்கேணியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மிதப்பு பாலம் விபத்துக்குள்ளாகி ஆறு பேர் மரணித்தபின்னர், இந்தப் பேருந்து சேவை முன்னெடுக்கப்படுகின்றமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இந்தப் பேருந்து சேவை ஏன் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி கலீலுல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிலையில், பேருந்து சேவையை முன்னெடுக்கும் அதிகாரிகள் தங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் சம்பவ இடத்துக்கு கிண்ணியா நகரசபை தலைவர் மற்றும் அதிகாரிகள் வருகை தரவேண்டும் எனவும் பிரதேசவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நிதியும் இல்லை; நீதியும் இல்லாத நாடு: கோவிந்தன் கருணாகரம்

Pagetamil

கிராம சேவகர் தாக்கப்பட்டதை கண்டித்து கல்முனையில் போராட்டம்!

Pagetamil

UPDATE: குறிஞ்சாங்கேணி படகு விபத்து: பலி எண்ணக்கை 6!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!