28.4 C
Jaffna
December 5, 2021
உலகம்

பூமியை நோக்கி வரும் சிறு கோளை திசை மாற்றும் முயற்சியில் நாசா!

பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை நிறுத்தும் சோதனை முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா இறங்கியுள்ளது.

பூமியிலிருந்து 11 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுகோள் மீது வேண்டுமென்றே மோதவுள்ள விண்கலன் ஒன்று விண்வெளிக்குள் செலுத்தப்பட்டுள்ளது.

அது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலிருந்து SpaceX ரொக்கட்டின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியில், சூரியனைச் சுற்றிவரும் Dimorphos எனும் 160 மீட்டர் அகலம்கொண்ட சிறுகோளின் பயணப்பாதையை மாற்ற முடியுமா என்பது ஆராயப்படும்.

சோதனையின் தாக்கம் அடுத்த ஆண்டு பிற்பாதியிலேயே தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பூமிக்கு அருகில் 140 மீட்டருக்கும் அதிகமான அகலம்கொண்ட சுமார் 10,000 சிறுகோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இருப்பினும், அவை பூமியில் விழக்கூடிய சாத்தியம், அடுத்த 100 ஆண்டுகளில் அவ்வளவாக இல்லை என்று கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

விண்வெளிக்குச் சென்ற சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்

Pagetamil

அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரையும், மனைவியையும் கட்டி வைத்து கொள்ளை!

Pagetamil

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.19 கோடியை தாண்டியது!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!