28.4 C
Jaffna
December 5, 2021
குற்றம்

பசுக்களை இறைச்சியாக்கிய கும்பல் கைது!

மாவனெல்லை – ஹெம்மாதகம வீதியில் திரிங்காதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் 8 மாடுகளை வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் கேகாலை கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் எல்.எம்.என்.விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதிகாரிகள் குழுவொன்று மாவனெல்லை – ஹெம்மாதகம வீதியில் திரிங்கதெனிய பிரதேசத்தில் உள்ள குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அனுமதியின்றி வெட்டப்பட்ட 8 மாடுகளின் உடல்களை வீட்டில் வைத்து போலீசார் கண்டுபிடித்தனர்.

கொல்லப்பட்ட 8 மாடுகளில் 7 பசுக்கள். கன்று ஈனும் நிலையிலிருந்த பசும் கொல்லப்பட்டு, கன்றுக்குட்டி  வெளியில் எடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏனைய ஆறு பசுக்களையும் பரிசோதித்த மாவனல்லை கால்நடை வைத்தியர் அவற்றிலும் இளம் கன்றுகள் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டு, விலங்குகளின் உடல்கள் அழிக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கஞ்சா சிக்கியது!

Pagetamil

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் பேருந்தை கடத்திய 6 பேர் கைது!

Pagetamil

6 வயது சிறுமியின் வாயை பொத்தி பாழடைந்த வீட்டிற்கு இழுத்து சென்ற 17 வயது இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!