இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.
இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை தனியார் துறையினர் இன்று முதல் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1