27.3 C
Jaffna
December 5, 2021
இந்தியா

ஜெய் பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கம் வழக்கு

சிதம்பரம் நீதிமன்றத்தில் ஜெய் பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. மனுவை ஏற்ற நீதிபதி வரும் 25ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதாகக்கூறி தமிழகம் முழுவதும் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் படக்குழுவினர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (23) மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் மகேந்திரன் சிதம்பரம் 2ம் எண் மாஜிஸ்திரேட் கோர்டில் ஜெய் பீம் படக்குழுவினர்களான 2டி நிறுவனம்,நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவவை அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் சக்திவேல் வரும் 25ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வரதட்சணை கொடுமையால் ஒரு வாரத்தில் 3 இளம் பெண்கள் தற்கொலை!

Pagetamil

வேளாண் சட்டங்கள் இரத்து: மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல்!

Pagetamil

பௌத்த யாத்திரைத் தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!