28.4 C
Jaffna
December 5, 2021
சினிமா

ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஆரவ்

பிக் பாஸ் ஆரவ்வுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017ஆம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ‘ஓ காதல் கண்மணி’ மற்றும் ‘சைத்தான்’ ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

ஆரவ்விற்கும், ஜோஷ்வா படத்தில் நாயகியாக நடித்த நடிகை ராஹிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஆரவ் – ராஜி தம்பதிக்கு இன்று (24) ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் ஆரவ்வுக்கு வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

divya divya

அப்பா வயது நடிகருடன் ஜோடி சேர்ந்த இலியானா!

Pagetamil

பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு:

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!