28.4 C
Jaffna
December 5, 2021
உலகம்

அமெரிக்கப் பெட்ரோலிய இருப்பிலிருந்து 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைப் பெற பைடன் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகரிக்கும் எரிசக்திக் கட்டணங்களைக் குறைக்க நாட்டின் பெட்ரோலிய இருப்பிலிருந்து, 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய இருப்பிலிருந்து இவ்வளவு அதிகமாக எண்ணெய் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை.

அதிகரித்துவரும் பணவீக்கத்தைச் சமாளிக்க அமெரிக்க மக்களுக்கு உதவுவதும் அதன் நோக்கம்.

அதிகளவில் கச்சா எண்ணெயை வெளியிடுவதற்கான முடிவை எட்டுவதற்குமுன் கடந்த பல வாரங்களாக வெளிநாட்டுத் தலைவர்கள் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருடன் பேச்சு நடத்தியதாக ஜனாதிபதி பைடன் கூறினார்.

ஒருங்கிணைந்த அந்த நடவடிக்கை அதிகரித்துவரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடித் தீர்வாகாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இப்போதைக்கு மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போது விலை குறைவதைப் பார்ப்பதற்கு ஆன அனைத்தையும் செய்யவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

எண்ணெயைச் சார்ந்திருக்கும் போக்கிலிருந்து பசுமை எரிசக்திக்கு மாறுவது நீண்டகால இலக்கு என்றார் அவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

Pagetamil

மே 4 முதல் இந்தியர்கள் வருகைக்கு தடை: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

divya divya

பூமிக்கு சிவப்பு எச்சரிக்கை: முதன்முறையாக கிரீன்லாந்து பனிச்சிகரத்தில் பெரு மழை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!