27.3 C
Jaffna
December 5, 2021
குற்றம்

யாழில் குழந்தை பிரசவித்த 18 வயதான யுவதி: புதைக்க முற்பட்டபோது மயிரிழையில் மீட்கப்பட்டது!

யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவொன்றில் 18 வயதான யுவதியொருவர் குழந்தை பிரசவித்த பின்னர், அதை புதைக்க முற்பட்ட சமயத்தில், அந்த முயற்சி தடுக்கப்பட்டு, குழந்தை மயிரிழையில் உயிர்தப்பியது.

இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (23) அதிகாலை நடந்தது.

யாழ் மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிரிவென்றின் பகுதியொன்றில், 18 வயதான யுவதியொருவர் இன்று அதிகாலை குழந்தை பிரசவித்துள்ளார். திருமணத்தின் முன்னரே குழந்தை பிரசவித்ததால், அதனை புதைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

யுவதியும், தாயாரும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்வதை அவதானித்த அயலவர்கள் தலையிட்டதுடன், பொலிஸ் அவசர இலக்கம் மற்றும் கிராமசேவகருக்கு தகவல் வழங்கினர்.

உடனடியாக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையையும், தாயையும் தமது பொறுப்பில் எடுத்து, வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பொலிசார் அங்கு சென்ற போது, குழந்தையை புதைக்க கிடங்கு வெட்டப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Related posts

கிளிநொச்சியில் பகல்த்தூக்கமிட்ட இளைஞனிற்கு வாள் வெட்டு: மோட்டார் சைக்கிள் எரிப்பு!

Pagetamil

வவுனியாவில் ரௌடிகள் வீடு புகுந்து செய்த வேலை!

Pagetamil

காதல் திருமணம் செய்த யாழ் யுவதியை வாளுடன் விரட்டிச் சென்ற இருவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!