கனடாவிற்கு தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று அங்குள்ள சிலருடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, இன்னும் சிலர் இருவரது வருகைக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்காபரோ நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று (20) சந்திப்பு நடந்தது. மண்டபத்திற்கு வெளியில் ஒன்று கூடியவர்கள், சுமந்திரன் மற்றும் சாணக்கியனிற்கு எதிராக கோசமிட்டனர்.
அத்துடன், நிகழ்வை ஏற்பாடு செய்த கனடிய தமிழரை மண்டபத்திற்கு வெளியே வருமாறு போராட்டக்காரர்கள் அழைத்த போதும், அவர் வெளியே வரவில்லை.
அண்மையில் அமெரிக்காவிற்கு சுமந்திரன் தரப்பு சென்ற பின்னர், கனடா, பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1