முக்கியச் செய்திகள்

இலங்கையில் புதிய டெல்டா பிறழ்வு அடையாளம் காணப்பட்டது: வடக்கிலும் பரவுகிறது!

இலங்கையில் மற்றுமொரு டெல்டா திரிபு ண்டறியப்பட்டுள்ளது என்று இலங்கை ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய டெல்டா திரிபிற்கு B.1.617.2.104 என பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே பி.1.617.2.287  வகை திரிபு கண்டறியப்பட்டது. இதற்கு மேலதிகமாக புதிய திரபு கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய மரபணு பகுப்பாய்வு அறிக்கை இன்று சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது, அங்கு இலங்கையைச் சேர்ந்த டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த திரிபு பெரும்பாலும் வடக்கு, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இருந்து பதிவாகியுள்ளது.

டெல்டா பிறழ்வு சந்தேக மாதிரிகள் ஹொங்கொங்கில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, திரிபு உறுதி செய்யப்பட்டது.

தற்போது, இலங்கையில் 3 வகை கொரோனா வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. SARS-CoV-2 வைரஸின் பரம்பரையாக, முதலில் பரவிய B.411, மற்றும் டெல்டா பிறழ்வுகளான B.1.617.2.104, B.1.617.2.287 ஆகியவையே அவையாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

தந்தை, மகள், காதலன் தீவிபத்தில் பலி: காதலனே தீ வைத்தார்?

Pagetamil

நபிகளை இழிவுபடுத்தியதாக கூறி இலங்கையர் சித்திரவதை செய்யப்பட்டு அடித்துக் கொலை: பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கானவர்கள் வெறிச்செயல்!

Pagetamil

இன்று கருப்பு ஞாயிறு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!