சீனாவில் சில பெற்றோர் தங்களது குழந்தையின் தலை வடிவத்தை அழகாக்க, சீர் செய்யும் தலைக்கவசங்களை அணிவிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைக்குத் தலைக்கவசம் போட்டு சிகிச்சை அளிக்கும் அளவுக்குத் தலை வடிவத்தில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் உள்ளதா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்யுமாறு அவர்கள் கூறினர்.
பொதுவாக, குழந்தைகள் வளரும்போது அவர்களின் தலை வடிவம் சரியாகிவிடும் என நிபுணர்கள் சுட்டினர்.
தலைக்கவசம் அணிவதால் பெரிய மாற்றம் ஏற்படப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
அண்மை ஆண்டுகளில், சீனாவில் அத்தகைய தலைக்கவசங்கள் பிரபலமாகியுள்ளன.
குழந்தைகள் அவற்றைத் தினமும் 23 மணிநேரத்திற்கு அணிந்திருந்தால், அவர்களின் தலை வடிவம் சரியாகிவிடும் எனச் சில அமைப்புகள் கூறுகின்றன.
தோற்றத்தில் அதிக அக்கறை செலுத்தும் பெற்றோர் அதைப் பின்பற்றுகின்றனர்.