27.6 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி ஹோல் ஒஃப் ஃபேம் பட்டியலில் மஹேல, பொலக், பிரிட்டின்!

ஐசிசி ஹோல் ஒஃப் ஃபேம் (Hall of Fame) பட்டிலில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்தின் ஜானட் பிரிட்டின் மற்றும் தென்னாபிரிக்காவின் ஷான் பொலக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி ரி 20 உலகக்கோப்பையின், நியூசிலாந்து- அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இறுதிப் போட்டி, டுபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்குவதற்கு முன்பாக, ஐசிசி ஹோல் ஒஃப் ஃபேம், சர் கிளைவ் லொயிட் இந்த ஜாம்பவான்கள் முறைப்படி அறிமுகப்படுத்தப்படுவார்.

ஐசிசி ஹோல் ஒஃப் ஃபேம் விருதென்பது, சர்வதேச கிரிக்கெட்டிற்கு முக்கிய பங்களிப்பு செய்த வீரர்களிற்கு வழங்கப்படும், மதிப்பு மிக்க விருதாகும்.

2009 இல் இந்த விருது வழங்கப்பட தொடங்கியதில் இருந்து 106 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பிரிட்டின், ஜெயவர்த்தன மற்றும் பொலாக் ஆகியோர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

மஹேல ஜெயவர்த்தன இலங்கையின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர், 2014 இல் ICC ஆடவர் T20 உலகக் கோப்பையை வென்ற மற்றும் நான்கு முக்கிய ICC இறுதிப் போட்டிகளை எட்டிய அணியில் அங்கம் வகித்தவர்.

இது குறித்து மஹேல ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், “ஐ.சி.சி ஹோல் ஒஃப் ஃபேமில் இடம்பிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையைச் சேர்ந்த லெஜண்ட்களான சங்கா மற்றும் முரளி மற்றும் கடந்த காலத்தின் பல சிறந்த கிரிக்கெட் வீரர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்த கவுரவம். இந்த அங்கீகாரத்திற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் எனது பயணத்தில் எனக்கு உதவிய எனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் மற்றும், மிக முக்கியமாக, இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட, எனது பயணத்தில் எனக்கு உதவிய அனைவருடனும் இந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

இலங்கை கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரரான ஜெயவர்தன 149 டெஸ்ட், 448 ஒருநாள் மற்றும் 55 டி20 போட்டிகள் என 652 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே, அவரை விட 12 போட்டிகளில் அதிகமாக ஆடிள்ளார்.

ஜெயவர்த்தன 149 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில், 49.84 சராசரியுடன் 11,814 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டம் குவித்த ஒன்பதாவது வீரர். அதிகபட்சம் 374. 2006 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக குமார் சங்கக்காரவுடன் 624 ரன்கள் இணைப்பாட்டமாக பெற்றார்.

448 ஒருநாள் போட்டிகளில்  (33.37 என்ற சராசரியில், 19 சதங்களுடன்12,650 ரன்கள் குவித்துள்ளார். உலகளவில் டெண்டுல்கர் (463) மட்டுமே அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இரண்டு முறை கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியில் இடம்பிடித்திருந்தார். 2011 இறுதிப் போட்டியில் 103 ரன்கள் எடுத்தார்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment