28 C
Jaffna
December 5, 2023
இந்தியா

அழகிகள் மரணத்தில் திருப்பம்: விருந்து மண்டப சிசிரிவி காட்சிகள் மாயமானது கண்டறியப்பட்டது!

மிஸ் கேரளா அழகிப் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்ற அழகிகள், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் பொலிசார், விபத்தில் முன் அவர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்வின் சிசிரிவி காட்சிகள் மறைக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் பெற்றவர் அன்சி கபீர், இரண்டாவது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.

இருவருமே எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 1ஆம் திகதி அதிகாலை 1 மணி அளவில் எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது ஆண் நண்பர்கள் இருவரும் காரில் இருந்தனர். ஆண் நண்பர் ஒருவர் காரை செலுத்தி சென்றார்.

அப்போது, மோட்டார் சைக்கிளுள் ஒன்றுடன மோதும் நிலைமையை தவிர்ப்பதற்காக, வாகனத்தை திருப்ப, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்னொருவர் இலேசான காயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார், விபத்தின் முன்னர் அழகிகள் குழுவினர் டிஜே பார்ட்டி ஒன்றிலிருந்து திரும்பியதை கண்டறிந்தனர்.

அந்த விருந்து நடந்த ஹொட்டலில் இரண்டு முறை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

ஃபோர்ட் கொச்சியில் உள்ள ‘நம்பர் 18’ ஹோட்டலில் , விபத்து நடந்த தினத்தன்று டிஜே பார்ட்டி நடந்த மண்டபத்தின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டிவிஆர்) உரிமையாளர் எடுத்து சென்றுள்ளார். ஹோட்டல் ஊழியர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்தின் அருகே கிடைத்த சிசிடிவி காட்சிகளில், அன்சியும் அஞ்சனாவும் பயணித்த காரை ஆடி கார் துரத்துவது தெரிந்தது. அன்சியின் காரை பின்தொடர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ​​அன்சியும் அவரது தோழிகளும் குடிபோதையில் இருந்ததால் எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

இருப்பினும், அஞ்சனாவும் அன்சியும் பங்கேற்ற அதே விருந்தில் இவர்கள் கலந்து கொண்டார்களா என்றும், அவர்களுக்குள் மோதலின் சாத்தியக்கூறுகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே மதுக்கடை மற்றும் பிற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்தனர். ஆனால் டிஜே பார்ட்டி மண்டபம் மற்றும் பார்க்கிங் ஏரியாவில் மட்டும் காட்சிகள் அடங்கிய டிவிஆரை ஹொட்டல் உரிமையாளர் மறைத்ததால் சந்தேகம் வலுத்தது.

மண்டபத்தில் நடந்த டிஜே பார்ட்டியில் கலந்து கொண்ட உடனேயே அன்சியும் அவளுடைய தோழிகளும் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை காட்சிகள் புலப்படுத்துகின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு முறை போலீசார் ஹொட்டலை ஆய்வு செய்த போதும், ஹொட்டல் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையிலும், மண்டபத்தின் காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் மறைக்கப்பட்டதில் உரிமையாளரின் தொடர்பு தெரியவந்தது. ஹொட்டல் உரிமையாளரிடம் போலீசார் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

காரை ஓட்டி வந்த அப்துல் ரஹ்மானை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் பாலம்கோணத்தைச் சேர்ந்த 25 வயதான அன்சி கபீர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஐடி பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படிக்கும் நாட்களில் தான், அன்சி மாடலிங்கைத் தொடரத் தொடங்கினார், பின்னர் 2018 ஆம் ஆண்டின் மிஸ் மலபார் போட்டி மற்றும் லுலு அழகுப் போட்டியில் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

பேஷன் துறையில் அவர் நுழைவதில் அவரது உறவினர்கள் பலர் முரண்பட்டாலும், அவரது பெற்றோர் கபீரும் ரசீனாவும் தங்கள் ஒரே மகளின் அனைத்து முயற்சிகளிலும் எப்போதும் ஆதரவாக இருந்தனர். மிஸ் கேரளா போட்டியில், பட்டம் வென்றிருந்தார். அன்சிக்கு சினிமா துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற திருச்சூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான அஞ்சனா ஷாஜன் (26) மாடலிங் துறையில் முன் அனுபவம் உள்ளவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மிக்ஜாம்’ புயலால் வரலாறு காணாத அடைமழை: ஸ்தம்பித்தது சென்னை

Pagetamil

விராட் கோலியின் உணவகத்திற்கு வேட்டி அணிந்து சென்ற தமிழருக்கு அனுமதி மறுப்பு!

Pagetamil

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

Pagetamil

‘சனாதனத்தை பழித்ததன் விளைவு’: முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்

Pagetamil

மதுரை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்: டிஜிபி அலுவலகத்திடம் அமலாக்கத் துறை புகார்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!