25.3 C
Jaffna
February 2, 2023
மருத்துவம்

காமசூத்ரா சொல்லும் ‘யோனிப்பொருத்தம்’; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்?

பேருந்தில் பின்னால் உரசுபவனை ‘மிருகம் மாதிரி நடக்கிறான்’ என்று பெண்கள் திட்டுவதை நிறைய பேர் கேட்டிருப்போம் அல்லது நாமேகூட அப்படித் திட்டியிருப்போம். தன் துணையிடம் அல்லது தன்னை விரும்புகிற பெண் தவிர்த்து, மற்ற பெண்களிடம் தன்னுடைய காமத்தை உரசுவதில் ஆரம்பித்து வன்புணர்வு வரைக்கும் ஏதோ ஒருவகையில் அடைய விரும்புகிற ஆண்களை, பெண்கள் ‘மிருகம்’ என்றே நினைக்கிறார்கள். அதை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால், காமசூத்ரம் என்ன சொல்கிறது தெரியுமா?

மனிதர்களின் காமத்துக்கும் விலங்குகளின் காமத்துக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசமொன்று இருக்கிறது. அதன் பெயர் மனம். காமத்தில் கிடைக்கிற சுகத்தை விலங்குகளால் அறிய முடியாது. அதற்கு மனம் கிடையாது. அதனால்தான், இயற்கையின் நியதிப்படி அவை இனப்பெருக்க காலத்தில் மட்டும் இணை சேர்கின்றன. மனிதர்களின் மனதுக்கு காமத்தின் மூலம் உணரப்படுகிற சுகம் தெரியும் என்பதால்தான், சிலர் எந்நேரமும், எக்காலமும் அதே நினைப்புடன் இருப்பார்கள். காமத்தில் ‘தன் சுகம் மட்டுமே பெரிது’ என ஆண் நினைக்கும்போதுதான், அது வன்புணர்வு வரைக்கும் சென்று விடுகிறது. விலங்களுக்கு இதெல்லாம் தெரியாது என்பதால், இப்படிப்பட்ட மனிதர்களை இனிமேல் மிருகங்களுடன் ஒப்புமை செய்யாமல் இருப்பது நலம்.

காமத்தையும் மிருகத்தையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் திருமணப் பொருத்தங்களில் ஒன்றான ‘யோனிப் பொருத்தம்’ பற்றியும் கட்டாயம் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் பொருத்தத்தில், ஆண் பெண் பாலுறுப்புகளை விலங்குகளின் பாலுறுப்புகளோடு பொருத்திப் பார்ப்பார்கள்.

திருமண பந்தத்தில் நுழையவிருக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் `சமரத’மாக, அதாவது பொருத்தமாக இருக்க வேண்டும் என்கிறது காமசூத்ரம்.

அது என்ன சமரதம்?

வாத்ஸாயனரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், தாம்பத்திய உறவின்போது புணர்ச்சி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இருக்க வேண்டும். அதற்குக் கணவன், மனைவி புணர்ச்சி உறுப்புகளின் அகல, நீள மற்றும் ஆழ அளவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும். ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், மனைவியின் புணர்ச்சி உறுப்பின் ஆழத்துக்கு ஏற்றபடி கணவனின் புணர்ச்சி உறுப்பின் நீளம் இருக்க வேண்டும். அப்படியில்லாதபோது இருவருக்குமே தாம்பத்திய உறவில் திருப்தி கிடைக்காது. இந்த விஷயத்தைத்தான் ‘யோனிப்பொருத்தம்’ மூலம் கண்டறிவதாக காமசூத்ரா சொல்கிறது.

இதுபற்றி மனநல மருத்துவர் ஷாலினி தெரிவிக்கும் போது, ‘கல்யாணம் செய்யும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸுவலி கெமிஸ்ட்ரி நன்றாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்வதுதான் யோனிப் பொருத்தம். ஆணோ, பெண்ணோ சிலருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகமிருக்கும்; சிலருக்கு குறைவா இருக்கும். இதைத் தெரிந்து கொண்டு, யாருடன் யாரை சேர்க்கலாமென்பதை கண்டுபிடிக்கிற ஒரு வழியாத்தான் நான் யோனிப் பொருத்தத்தைப் பார்க்கிறேன். இது திருமணத்துக்கு மிக மிக தேவை என்பதுதான் என்னுடைய கருத்தும். ஆனால், இதை சம்பந்தப்பட்டவர்களுடைய இயல்பை வைத்துத்தான் கண்டுபிடிக்க முடியும்.

உதாரணத்துக்கு, பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்கள்லகூட நிச்சயத்துக்குப்பிறகு கிடைக்கிற கேப்ல சிலர் `செக்ஸ் டாக்’ வரைக்கும் பேசி, நல்லா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆன பிறகு கல்யாணம் செய்வார்கள். சிலர், இந்தக் காலத்திலும் `நீ சாப்பிட்டியா; நீங்க சாப்பிட்டீங்களா’ங்கிற அளவுலேயே பேசிட்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க. `உனக்கு என்ன கலர் பிடிக்கும்’னு கேட்கிறதையே பெரிய பகிர்தலா நினைக்கிற சிலரும் இந்தத் தலைமுறையில இருக்கிறார்கள். நம்புறதுக்கு கஷ்டமா இருந்தாலும் நான் சந்திச்சுட்டு வர்ற உண்மை இது. இவங்களுக்கு செக்ஸ் தொடர்பா என்ன விழிப்புணர்வு இருந்துவிட முடியும்? சிலர் அப்படியே எதிர்ப்பதமா `அதான் நிச்சயமாயிடுச்சுல்ல’ என்று டாப்லெஸ் போட்டோ கேட்குற அளவுக்கு, அனுப்புற அளவுக்கும் இருக்காங்க. ரெண்டுமே அதிகப்படிதான்.

முதல் இரண்டு வகையில், நாசுக்கு நாகரிகம் பார்த்து செக்ஸ் டாக் இல்லாம இருந்துட்டு, திருமணத்துக்குப்பிறகு செக்ஸ் லைஃப்ல சந்தோஷமா இருக்காங்கன்னா நல்லது. அப்படியில்லாம, குத்துமதிப்பா செக்ஸ் பண்ணிட்டோ அல்லது எனக்கு மட்டும் உச்சக்கட்டம் கிடைச்சா போதும்னோ ஆண் இருந்தா பெண் நிலைமை கஷ்டம்தான். மூன்றாவது வகையில் அடக்கி வெச்சதையெல்லாம் தனக்குன்னு ஒரு பொண்ணு நிச்சயமானதும் வெளிக்காட்டுறான்னா, அல்லது அந்தப் பெண்ணை செக்ஸ் டாய் மாதிரி பயன்படுத்துவானா அப்படிங்கிறது திருமணத்துக்குப் பின்னாடிதான் தெரிய வரும். இந்த விஷயங்களை ஓரளவுக்காவது முன்கூட்டியே தெரிவதென்றால் பரஸ்பரம் நிறைய பேசணும். நிச்சயம் செய்த திருமணத்தை நிறுத்துற பேச்சைப்பத்தி நான் குறிப்பிடலை. சேர்ந்து வாழறதுக்கு தேவையான பேச்சுகளைப் பேசணும். பரஸ்பரம் உருவம் பிடிச்சிருக்கணும்; குணம் பிடிச்சிருக்கணும்; இவனோட/இவளோட ஒரே அறையை பகிர்ந்துக்க எனக்குப் பிடிச்சிருக்குன்னு மனசு சொல்லணும். அதுக்காக மனசு கொஞ்சம் ஏங்கவும் செய்யணும். முக்கியமா, பரஸ்பரம் உடல்களைப் பகிர்ந்துக்கிறதை பத்தி யோசிக்கிறப்போ இவன்கூடவா/இவகூடவான்னு அருவருப்பு வரவே கூடாது. அப்படி வந்தா, ரெண்டு பேருக்கு நடுவுல யோனிப்பொருத்தம் இல்ல. அதாவது, கெமிஸ்ட்ரி இல்லைன்னு அர்த்தம்” என்கிறார்.

 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

பெண்களிற்கு பாதுகாப்பான கருத்தடை முறை எது?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: சுயஇன்பப் பழக்கம் தாம்பத்திய வாழ்க்கைக்கு தடையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: திருமணமாகி ஒரு மாதமாகியும் தாம்பத்தியம் தடைப்படுவது ஏன்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!