29.5 C
Jaffna
March 28, 2024
சினிமா

ஜோடி கிடைக்காததால் திருமணத்தில் நாட்டமின்றி போன நடிகை!

நடிகை ரைமா சென் திருமணம் வாழ்க்கையில் மிக முக்கியமானது இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழில் அருண் விஜய்யுடன் அக்னி சிறகுகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் ரைமா சென். இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவரது சகோதரி ரியா சென்னும் தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். ரைமா சென்னுக்கு 41 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் வாழ்க்கையில் மிக முக்கியமானது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரைமா சென் அளித்துள்ள பேட்டியில், ‘‘திருமணம் வாழ்க்கைக்கு ஒரு முழுமையான முற்றுப்புள்ளி. திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என அனைவருமே கருதுகிறார்கள். ஆனால் வாழ்க்கைக்கு திருமணம் முக்கியம் இல்லை என்பது எனது கருத்து. அதனால் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன்.

திருமணம் செய்து கொள்ளாமல் நான் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறேன். சுதந்திரமாக வாழ்கிறேன். எத்தனையோ கற்றுக்கொண்டேன். அதற்காக நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என சொல்லவில்லை. சரியான ஜோடி கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன்.

இப்போது வரை அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கவில்லை. அதற்காக என் சந்தோஷத்திற்கு குறை ஏதும் இல்லை‘‘ என்றார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment