27.6 C
Jaffna
March 29, 2024
இந்தியா

மனைவிக்கு எதிராக வழக்கு தொடா்ந்த கணவனுக்கு ரூ.10,000 அபராதம்!

மனைவிக்கு எதிராக வழக்கு தொடா்ந்த கணவனுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தன் மனைவி, கணவனால் கை விடப்பட்ட பெண் என்று சான்றிதழ் வாங்கியுள்ளாா். அதை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரா் தனிப்பட்ட பகையினால் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா். அவா் மனைவியை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டாா். திருமணமான பெண் ஒருவருடன் வாழ்ந்து வருகிறாா். அதனால், அவரது மனைவிக்கு சான்றிதழ் வழங்கியது சரிதான் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரா் 10 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியை விட்டு பிரிந்து, வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறாா். அதுவும் அந்த பெண்ணும் திருமணமானவா். தமிழக அரசின் சமூக நலத்துறை வழங்கும் சலுகைகளை பெற, மனுதாரரின் மனைவி கணவரால் கைவிடப்பட்ட பெண் என்ற சான்றிதழ் பெற்றுள்ளாா். அதை கெடுக்க மனுதாரா் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா்.

இதை ஏற்க முடியாது. மனைவியை விட்டுப் பிரிந்தது மட்டுமல்லாமல், வேறு ஒரு திருமணமான பெண்ணுடன் மனுதாரா் குடும்பம் நடத்துகிறாா். கட்டிய மனைவியையும், பெற்ற ஒரு மகனையும் தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்ட மனுதாரா், தற்போது மனைவிக்கு அரசு உதவி திட்டங்கள் கிடைக்கக்கூடாது என்பதற்காக இந்த வழக்கை தொடா்ந்துள்ளாா். இவரது செயலை ஏற்க முடியாது.

அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரருக்கு ரூ.10,000 வழக்கு செலவு விதிக்கிறேன். இந்தத் தொகையை நான்கு வாரங்களுக்குள் மனைவிக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால், மனுதாரரிடம் இருந்து வருவாய் வசூலிப்புச் சட்டத்தின்படி பணத்தை வசூலிக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment