இலங்கை

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துக

தற்போது அனைத்து பகுதிகளிலும் பெரும் போக பயிற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் கண்டாவளை, முரசுமோட்டை, பெரியகுளம், கல்மடு போன்ற பல பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகள் நடமாடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளில் தினமும் பயிர்களை நாசம் செய்து வருவதாக தெரிவிக்கின்ற விவசாயிகள், தற்பொழுது உரப்பிரச்சனை மற்றும் கிருமிநாசினி பிரச்சினைகளுடன் தற்போது கட்டாக்காலி கால்நடைகள் பிரச்சினையும் சவாலாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பயிர்செய்கை கூட்டங்களில் கால்நடை கட்டுப்படுகள் தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சளவிலேயே உள்ளதாகவும், இது நடைமுறைகளுக்கு வருவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கமக்கார அமைப்புக்கள் ஊடாக கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச் சோடிய பாடசாலைகள்

Pagetamil

பச்சைப்பசேலென்றிருந்த மரங்களை பட்ட மரங்களென குறிப்பிட்டு தறிக்க அனுமதித்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம்!

Pagetamil

கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த இருவர்: காரணத்தை சொல்கிறது சுகாதார அமைச்சு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!