குற்றம்

கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கேரளகஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்றயதினம் குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய அவர்கள் வீடொன்றில் இருந்து 3 கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர்.

அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேபகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

காருடன் கடத்திச் செல்லப்பட்ட யுவதி: நூதன திருட்டு!

Pagetamil

பெண் வைத்தியர் ஆடை மாற்றியதை புகைப்படமெடுத்த ஆண் வைத்தியர் கைது!

Pagetamil

முல்லைத்தீவில் பயங்கரம்: பெண்ணின் கடி காயங்களிற்கு உள்ளான பொலிஸ்காரர் வைத்தியசாலையில்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!