27.1 C
Jaffna
April 26, 2024
குற்றம்

பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடித்த 3 மீனவர்கள் கைது

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளனர்.

நேற்று புதன் கிழமை (27) இரவு குறித்த 3 மீனவர்களும் படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று அட்டை பிடித்த நிலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ,453 கடல் அட்டை கள், படகு இயந்திரம், அட்டை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி, சப்பாத்து என்பன மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று வியாழக்கிழமை காலை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

குறித்த 3 மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு அமைவாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 453 கடல் அட்டைகள் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டது.

கடல் அட்டை தொழில் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மட்டுமே கடற்பரப்பில் அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடல் அட்டைகளின் உள்ளூர் சந்தை மதிப்பு ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருடிய உத்தியோகத்தர்கள் கைது!

Pagetamil

பழங்கால அம்மன் சிலையுடன் முன்னாள் போராளி கைது!

Pagetamil

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கினார்!

Pagetamil

Leave a Comment