உலகம்

முன்னாள் காதலர்கள் சந்தித்துக் கொண்டபோது கட்டுப்படுத்த முடியவில்லையாம்: பொது இடத்தில் உடலுறவு கொண்ட ஜோடி கைது!

தாய்லாந்தின் பண்டைய வரலாற்று இடமொன்றில், பட்டப்பகலில், பொது இடத்தில் உல்லாசம் அனுபவித்த ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.

பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலருந்துவதை போல, அந்த ஜோடியும் பொது இடமென்பதையோ, மற்றவர்கள் பார்ப்பார்கள் என்பதையோ கணக்கெடுக்காமல் உடலுறவில் ஈடுபட்டனர். அதை பலரும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து, அந்த ஜோடியை பொலிசார் கைது செய்தனர்.

சியாங் மாய் மாகாணத்தில் பகோடா பகுதியில் கடந்த 22ஆம் திகதி சம்பவம் நடந்தது. வீடியோ வெளியானதையடுத்து, பொலிசார் ஜோடியை கைது செய்தனர். சலெர்ம் (48), சிறிராணி (42) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இரண்டு சந்தேக நபர்களும் வரலாற்று இடங்களில் பட்டப்பகலில் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டனர்.

இப்படியொரு சம்பவம் நடந்தது கூட அவ்வளவு அதிர்ச்சியானதல்ல. கைது செய்யப்பட்ட பின்னர், சம்பவம் தொடர்பாக அவர்கள் தெரிவித்த தகவலால்தான் தாய்லாந்து பொலிசார் ஆடிப் போயுள்ளனர்.

தாங்கள் முன்னாள் காதலர்கள் என்றும், பொது இடத்தில் பாலியல் உறவை மீண்டும் வளர்க்கத் திட்டமிடவில்லை, ஆனால் ஒரு நாள் பயணத்திற்காக சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கட்டியணைத்து கொண்டது, இப்படியொரு விபரீதத்தில் முடிந்துள்ளது என்று இந்த ஜோடி கூறியது.

‘அந்த இடம் மறைவாகத் தெரிந்ததால், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை யாராலும் பார்க்க முடியாது என்று நான் நினைத்தேன்.

வரலாற்று தளத்தை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. சியாங் மாய் மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், மேலும் இது நடக்காது என்று உறுதியளிக்கிறேன்.’ என சாலெர்ம் கூறினார்.

‘இந்த ஜோடி வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்த முன்னாள் காதலர்கள். ஆனால் பகோடாவில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். விசாரணைக்குப் பிறகு, நடந்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்கள். இந்த ஜோடி மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 5,000 பாட் (117பவுண்ஸ்) க்கு மேல் அபராதம் விதிக்கப்படும்.” என போலீஸ் கர்னல் கிட்டிபோங் ஃபெட்சமுனி கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

Related posts

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடாக உருவெடுத்தது சீனா!

Pagetamil

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,577 பேருக்கு தொற்று!

Pagetamil

எய்ட்ஸ் பாதித்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி நோயாளிகளின் வாழ்வு சிறக்க உதவிய தங்க மங்கை!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!