26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
சினிமா

ரஜினி விருது பெற்ற விழாவில் நானும் விருது பெற்றதில் மகிழ்ச்சி: தனுஷ்

ரஜினி விருது பெற்ற விழாவில் நானும் விருது பெற்றதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.

67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் ‘அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ்.

இந்த விருது பெறும் விழாவுக்காக ரஜினி, லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷின் மகன்கள் என அனைவரும் சென்றிருந்தனர். ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்கப்பட்டபோது விழா அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

‘அசுரன்’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய பிறகு பத்திரிகையாளர்கள் மத்தியில் தனுஷ் பேசும்போது, “சின்ன வயதிலிருந்து திரையில் பார்த்துப் பிரமித்துக் கைதட்டி விசிலடித்த எங்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் தேசிய விருது வாங்கியது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment