MV X-Press Pearl கப்பலினால் இலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் குற்றப்பத்திரிகைகள் உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே லஹந்தபுர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கப்பல் தீப்பிடித்ததால் இலங்கைக் கடற்பரப்பில் கரையொதுங்கிய கப்பலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டறிய பிரான்ஸில் உள்ள செட்ரி நிறுவனத்திற்கு உயிர் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில், தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் மாதிரிகள் லண்டனின் CEPA க்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இரண்டு பேராசிரியர்கள் தலைமையிலான 40 பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை நவம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று MEPA தலைவர் தர்ஷனி லஹந்தபுர கூறினார்.