எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு மீனவ சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக இழுவைமடி தடைச்சட்ட விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். சுமந்திரனின் இந்த நடவடிக்கையால், கரையோர பகுதிகளில் ஒற்றுமையாக வாழும் மீனவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளார் என குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இழுவை மடி மீன்பிடி முறையை தடை செய்ய வேண்டுமென எம்.ஏ.சுமந்திரனினால் அண்மையில் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று குருநகர் மீனவர்கள் கதவடைப்பிலும், எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
குருநகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், சந்தைகள் திறக்கப்படவில்லை.
குருநகர் இறங்குதுறை பகுதியில் மீனவர்கள் ஒன்றுகூடி கண்டன கூட்டம் நடத்தினார்கள். அங்கு எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1