சினிமா

நயன்தாராவின் திருமண திகதி முடிவு?

நடிகை நயன்தாராவின் திருமண திகதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களையும், கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் புகைப்படங்களையும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது தனது விரலில் அணிந்துள்ள மோதிரத்தை காட்டி அது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்றும், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து திருமணம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நயன்தாராவின் திருமணம் அடுத்த வருடம் நடைபெற இருப்பதாகவும், திருமண திகதியை திருப்பதி கோவிலில் உள்ள புரோகிதர்களை வைத்து முடிவு செய்து விட்டதாகவும் வலைத்தளத்தில் புதிய தகவல் பரவி வருகிறது.

திருமணத்துக்கு முன்பு கைவசம் உள்ள படங்களை முடித்து விட நயன்தாரா திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஆட்டோவில் தியேட்டரிற்கு வந்த ஸ்ரேயா!

Pagetamil

‘திருமணத்தை விட பெண்களுக்கு சுயமரியாதைதான் முக்கியம்’ ; வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுத்து நடிகர் மோகன்லாலின் வீடியோ!

divya divya

அருண் விஜய்யின் 30-வது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியீடு!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!